தமிழக வெற்றிக் கழகத்தில் 19 புதிய நிர்வாகிகளின் விவரங்களை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் மாவட்டச் செயலாளர்கள் முதல் மாநில நிர்வாகிகள் வரை பலரை நியமித்து விஜய் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். இதில், விசிகவிலிருந்து அண்மையில் விலகிய ஆத்வ் அர்ஜுனா, அதிமுகவிலிருந்து விலகிய நிர்மல் குமார் ஆகியோர் அண்மையில் விஜய்யை சந்தித்து பேசியதாக கூறப்பட்ட நிலையில், அவர்களுக்கு தவெகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கி விஜய் உத்தரவிட்டுள்ளார்.

விஜய் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பு ரீதியிலானக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும், வலுவானத் தேர்தல் பிரசாரக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

1. திரு. ஆதவ் அர்ஜுனா B.A. (Political science)

தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்

2. திரு. CTR. நிர்மல் குமார் B.E., LLB.

துணைப் பொதுச்செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு)

3. திரு. P.ஜெகதீஷ்

தலைமைக் கழக இணைப் பொருளாளர்

4. திரு. A.ராஜ்மோகன்

கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர்

5. திரு. லயோலா மணி (எ) A.மணிகண்டன் M. A.

கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்

6. பேராசிரியர் திரு. A.சம்பத்குமார் MBA., M.Phil., Ph.D.

கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்

7. திருமதி. J.கேத்ரின் பாண்டியன் M.A., B.Ed.

கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்

8. திரு. S.வீரவிக்னேஷ்வரன் B.E.

செய்தித் தொடர்பாளர்

9. திரு. S.ரமேஷ் B.E.

இணைச் செய்தித் தொடர்பாளர்

10. திரு. R.ஜெயபிரகாஷ் M.E., Ph.D.

தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்

11. திரு. A.குருசரண் DCE.

தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

12. திரு. R.J.ரஞ்சன் குமார் B.E

தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

13. திரு. திரு. R.குருமூர்த்தி BBA.

சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்

14. திரு. R. ராம்குமார் BCA.

சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

15. திரு. P. வெங்கடேஷ் D.EEE., BE (EEE),

சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

16. திரு. R.நிரேஷ் குமார்

சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

17. திரு. S.அறிவானந்தம் M.A., M.Ed.

சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

18. திரு.B.விஷ்ணு Dip.

சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

19. திருமதி. A.ஃப்ளோரியா இமாக்குலேட் B.A.

சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

மேற்கண்ட பொறுப்புகளில் நியமிக்கப்படுபவர்கள் அனைவரும் எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கிணங்க கழகப் பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்களது வழிகாட்டுதலின்படி கழகப் பணிகளை மேற்கொள்வார்கள் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.