திடீரென பத்திரப்பதிவு துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!
நிருபர்
January 13, 2025
ஜனவரி 18ம் தேதி ஒருநாள் மட்டும் 100 சார்பதிவாளர் அலுவலங்களுக்கு செயல்டுவதிலிருந்து விலக்கு அளித்து விடுமுறையும், 20ம் தேதி அன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்தும் அறிவிக்கப்பட

ஜனவரி 18ம் தேதி ஒருநாள் மட்டும் 100 சார்பதிவாளர் அலுவலங்களுக்கு செயல்டுவதிலிருந்து விலக்கு அளித்து விடுமுறையும், 20ம் தேதி அன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பொங்கல் பண்டிகையை தங்களுடைய குடும்பத்துடன் கொண்டாடும் விதமாக ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை தொடர் அரசு விடுமுறை அளித்துள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்களின் ஜனவரி 17ம் தேதி வெள்ளிகிழமை விடுமுறை அளிக்க கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் அக்கோரிக்கைகளை ஏற்று, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஜனவரி 17ம் தேதி ( வெள்ளிகிழமை ) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அந்த விடுமுறையினை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 25ம் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்திரவிடப்பட்டுள்ளது.

எனவே, மேலே குறிப்பிட்டுள்ளபடி ஜனவரி 17ம் தேதி வரை தொடர் விடுமுறை உள்ள நிலையில், அதன்பின் வரும் ஜனவரி 18ம் தேதி அன்று சனிக்கிழமையில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஜனவரி 18ம் தேதி அன்று ஒருநாள் மட்டும் செயல்படுவதில் இருந்து விலக்கு அளித்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தை மாதத்தின் முதல் வேலை நாளான 20.01.2025 அன்று சுபமுகூர்த்த தினமாக உள்ளதால், அன்று அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெற்றுள்ளது.

ஆகவே, இதனை ஏற்று 20.01.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரன முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளோடு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.