தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்திய சிறுவனின் உயிரிழப்பு!
நிருபர்
January 12, 2025
சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி தூத்துக்குடி செய்தி சிறுவன் மரணம் கிணற்றில் விழுந்து சிறுவன மரணம் Thoothukudi news

தூத்துக்குடி பால்பாண்டி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் சம்சுதீன் தனியார் பள்ளி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பர்வீன் தூத்துக்குடி கோர்ட் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன். இதில் மகன் சையத் சாஹில் ( 7 ) நேற்று முன்தினம் மாலை வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமாகி உள்ளார். இதனால் பதறிய அவரது குடும்பத்தினர் அப்பகுதியில் தேடிய போது, அங்குள்ள கிணற்றில் சிறுவன் தவறி விழுந்ததில் இறந்த கிடந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து விரைந்து வந்த சிப்காட் போலீசார், தீயணைப்பு வீரர்கள் துணையுடன் சிறுவனின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.