தூத்துக்குடி 'ஸ்பா' சென்டரில் பாலியல் தொழில் நடத்தியதாக உரிமையாளர், மேலாளர் கைது செய்யப்பட்டனர். மேலும், அங்கிருந்து 2 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி டவுன் பகுதியில் "ஸ்பா" சென்டரில் பாலியல் தொழில் நடந்து வருவதாக டவுன் ஏஎஸ்பி மதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தென்பாகம் போலீசார், பிரையன்ட் நகர் 4 வது தெருவில் உள்ள ஒரு ஸ்பா சென்டரில் சோதனை நடத்தினர். அங்கு இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது.

இது தொடர்பாக ஸ்பா சென்டரை நடத்திய சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மஞ்சக்கல்பட்டியைச் சேர்ந்த சிங்காரம் மகன் விக்னேஷ் (30) மற்றும் அதன் மேலாளர் சங்ககிரியைச் சேர்ந்த மணி மகன் கோபால் (24) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை, தென்காசியைச் சேர்ந்த 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.