தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நாளை (டிச.,17 ) செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி துணை மின்  நிலையத்தில் நாளை  17.12.2024  செவ்வாய்க்கிழமை  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக, தூத்துக்குடி மாநகரில் உள்ள போல்பேட்டை,  ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1ஆம் கேட், 2 ஆம் கேட், மட்டக்கடை,  எட்டயாபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு,  முனியசாமிபுரம், ரத்தினாபுரம், சத்திரம் தெரு, சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு,  தாமோதர நகர், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம் இன்னாசியார் புரம், எழில் நகர்,  அழகேசபுரம், திரவியபுரம்  முத்துகிருஷ்ணாபுரம்,

சுந்தரவேல்புரம், அம்பேத்கார் நகர்,  குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர்  முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர்,  ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது  என தெரிவிக்கப்பட்டுள்ளது.