தூத்துக்குடியில் புறாவை பறக்கவிட்டு காதலர் தினம் கொண்டாடிய மாணவர் சங்கம்
நிருபர்
February 14, 2021
தூத்துக்குடியில் புறாவை பறக்கவிட்டு காதலர் தினம் கொண்டாடிய மாணவர் சங்கம்

தூத்துக்குடியில், காதலர் தினத்தை வரவேற்கும் விதமாக, இதய வடிவ பலூன் மற்றும் புறாவை பறக்கவிட்டு, இந்திய மாணவர் சங்கத்தினர் காதலர் தினத்தை கொண்டாடினர்.

உலகம் முழுவதும் இன்று பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் அன்று தங்களது காதலிக்கு ரோஜா பூ மற்றும் பூங்கொத்து கொடுத்து காதல் வாழ்த்துக்களை தெரிவிப்பது வழக்கம்.

இந்நிலையில், சாதி, மதத்தை கடந்து, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் காதலை வரவேற்கும் விதமாக, தூத்துக்குடி மாநகரில்,தெற்கு காவல் நிலையம் அருகே, அம்பேத்கார் சிலை முன்பு, தூத்துக்குடி மாவட்ட இந்திய மாணவர் சங்க தலைவர் ஜாய்சன் தலைமையில், இதய வடிவலான பலூன் மற்றும் புறாவை பறக்கவிட்டு காதலர் தினத்தை கொண்டாடினர்.

இதில், மாவட்ட குழு உறுப்பினர் சதீஸ், சுதீஸ், விக்னேஷ், ஸ்பேனோசன்,சுயம்பு உள்ளிட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.