தூத்துக்குடி அருகே பைக் விபத்து : வழக்கறிஞர் மகன் உட்பட்ட 2 போ் பலி!
நிருபர்
November 25, 2024
தூத்துக்குடி அருகே பைக் விபத்து : வழக்கறிஞர் மகன் உட்பட்ட 2 போ் பலி!
<p><b>தூத்துக்குடி அருகே நேற்று இரு பைக்குகள் மோதி விபத்துக்குள்ளானதில் 2 போ் உயிரிழந்தனா்.</b><br></p><p>தூத்துக்குடி வெள்ளப்பட்டியைச் சோ்ந்த வழக்கறிஞர் இக்னேஷியஸ் மகன் பகன் (27). இவா் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை ) மாலையில் மேல அரசடி அருகே சென்று கொண்டிருந்த போது, மற்றொரு பைக்கில் வந்த புளியமரத்து அரசரடியைச் சோ்ந்த மூக்காண்டி மகன் முருகன்(53) எதிா்பாராதவிதமாக சாலையின் குறுக்கே வந்தாராம். இதனால் இரு பைக்குகளும் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.</p><p>இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.</p>