திருச்செந்தூரில் கடலில் நீராடிய இரண்டு பக்தர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அதிக மழை பெய்ததால், கடற்கரை மணல் கடலில் அடித்து செல்லப்பட்டு, அதிக அளவு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, திருச்செந்தூர் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், நேற்று கடலில் நீராடிய 2 பக்தர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

அவர்கள் இருவரையும் கடற்கரை பாதுகாப்பு பணியார்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், கடலில் நீராடும் பக்தர்கள் விழிப்புணர்வோடு நீராட வேண்டும் எனவும், அதிக மழை பெய்யும் பொழுது கடலில் நீராடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.