விளாத்திகுளம் அருகே பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு!
நிருபர்
October 06, 2024
விளாத்திகுளம் அருகே பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு!
<p><b>விளாத்திகுளம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். </b><br></p><p>ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ரமேஷ் (25). இவர் விளாத்திகுளத்தில் இருந்து எப்போதும் வென்றானுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த டிராக்டர பைக் மீது மோதியது. </p><p>இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து டிராக்டரை ஓட்டி வந்த வட மாநிலத்தை சேர்ந்த நபுகுல் இஸ்லாம் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>