<p><b>தூத்துக்குடி அருகே இருசக்கர வாகன விபத்தில் காயம் அடைந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.&nbsp;</b><br></p><p>தூத்துக்குடி அருகே உள்ள சாமிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் யாக்கோப் மகன் ஞானதுரை (46). இவர் இருசக்கர வாகனத்தில் சாமிநத்தம் கிராமத்திலிருந்து சென்ற போது ஒரு வளைவு சாலையில் திரும்பும்போது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.</p><p>இதில் பலத்த காயம் அடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கனகாபாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.</p>