<p><b>தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளரும், 39 வது வார்டு வட்டச் செயலாளருமான திருச்சிற்றம்பலம்,&nbsp; எம்ஜிஆர் இளைஞர்&nbsp; அணி துணை செயலாளர் டாக்டர் டைகர் சிவா ஆகியோரது ஏற்பாட்டில் தூத்துக்குடியில் உள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்திற்கு மதிய அறுசுவை அசைவ உணவு வழங்கப்பட்டது.</b></p><p>முன்னதாக அங்கு உள்ள குழந்தைகள் எஸ்பி சண்முகநாதனுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளை கொடுக்கும் படியும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டனர்.</p>