<p><b>சிறந்த கல்வி சேவையாற்றிய விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளிக்கு அன்னை பத்ரகாளி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட&nbsp; விருதினை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.&nbsp;</b><br></p><p>விருதுநகரில் செயல்பட்டு வரும்&nbsp; அன்னை பத்ரகாளி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் சிறந்து கல்வி சேவையாற்றும் 10&nbsp; அரசு உதவி பெறும் பள்ளிகளை தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி நடப்பாண்டு சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம்&nbsp; ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளி தேர்வு பெற்றதையடுத்து விருதுநகரில் நடந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி பங்கேற்று அப்பள்ளி செயலர்&nbsp; எஸ்.ஏ. திருமணியிடம் விருது வழங்கி கௌரவித்தார்.&nbsp; இதில் அறக்கட்டளை தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p>விருது பெற்ற பள்ளி செயலர் எஸ்.ஏ.&nbsp; திருமணியை பள்ளி முன்னாள்&nbsp; தலைமை ஆசிரியர் ஜெகதீசபாண்டி, பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.</p>