<p><b>சாத்தான்குளம் அருகே இரு வெவ்வேறு தோட்டங்களில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தீயணைப்பு மீட்பு துறையினர் விரைந்து&nbsp; வந்து தீயை அணைத்தனர்.&nbsp;</b><br></p><p>சாத்தான்குளம்&nbsp; அருகே உள்ள&nbsp; ராஜமன்னார்புரம்&nbsp; ராபின்சன்&nbsp; என்பவரது தோட்டத்தில் வேலி பகுதியில் திடீரென&nbsp; தீ பிடித்து எரிந்தது. காற்றில் வேகமாக&nbsp; தீ பரவியது. இதனையடுத்து தகவலின் பேரில் சிறப்பு நிலைய அலுவலர் ஹோரில் தாமஸ் செல்வபாபு தலைமையில் வீரர்கள் சதிஷ்குநமார், தவசிராஜ், அருள்முருகன், சுப்பிரமணியன், சீனிவாசன், பிரவீன், வைகுண்டம், முத்துமாரி ஆகியோர் விரைந்து சென்று தீயை மேலும் தடுத்தனர்.&nbsp;</p><p>இதேபோல், சாத்தான்குளம் அருகே உள்ள அச்சம்பாடு&nbsp; முத்துராஜ் என்பவரது ஆனந்தபுரத்தில் தோட்டத்தில் திடீரென தீ பிடித்து எரிந்தது.&nbsp; தகவலின் பேரில்&nbsp; தீயணைப்பு வீரர்கள்&nbsp; சென்று தீயை அணைத்தனர்.</p>