<p><b>பொத்தகாலன்விளை அங்கன்வாடிமைய குழந்தைகளுக்கு ஐஎன்டியூசி காங்கிரஸ் சார்பில் கல்வி உபகரணங்கள்&nbsp; வழங்கப்பட்டது.</b><br></p><p>சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தக்காலன்விளை அங்கன்வாடிமைய குழந்தைகளுக்கு காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கல்விஉபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி&nbsp; நடைபெற்றது. ஐஎன்டியுசி&nbsp; மாநில காங்கிரஸ் பொதுச் செயலர் லூர்துமணி தலைமை வகித்தார். முதலூர் கிராம கமிட்டித் தலைவர் செல்வகுமார். தெற்குவட்டார&nbsp; துணைத் தலைவர் செல்வ ஜெகன், சாஸ்தாவிநல்லூர்கிராம கமிட்டி பொறுப்பாளர் ஜோசப் செல்வராஜ், வட்டார பொதுச் செயலாளர்&nbsp; அந்தோணி செல்வன்&nbsp; ஆகியோர் முன்னிலை வகித்தனர்.&nbsp; &nbsp;அங்கன்வாடி மைய&nbsp; பணியாளர் பாத்திமா&nbsp; வரவேற்றார்.&nbsp; குழந்தைகளுக்கு எழுதும்பலகை,&nbsp; சிற்றுண்டி&nbsp; பை, துண்டு,&nbsp; பென்சில் டப்பா&nbsp; மற்றும் இனிப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p>இதில் பொத்தகாலன்விளை கிராம&nbsp; கமிட்டித் தலைவர் சந்தன திரவியம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள்&nbsp; மலையாண்டி, அந்தோணி&nbsp; உள்ளிட்ட&nbsp; பலர் கலந்து கொண்டனர். அங்கன்வாடிமைய அமைப்பாளர் காமாட்சி&nbsp; நன்றி கூறினார்.</p>