<p><b>தூத்துக்குடி டி.சவேரியார்புரம் ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் சேவியர் ஜெகன் (45) என்பவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 7.7.2024 அன்று&nbsp; தனது ஆடுகளை வீட்டில் முன்பு உள்ள ஆட்டை கட்டி வைத்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்த போது அதில் ஒரு ஆடு காணாமல் திருடுபோயுள்ளது.</b></p><p>இதுகுறித்து சேவியர் ஜெகன் அளித்த புகாரின் பேரில், தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்த செட்டிபெருமாள் மகன் சரவணக்குமார் (23) என்பவர் சேவியர் ஜெகனின் ஆட்டை திருடியது தெரியவந்தது.</p><p>இதனையடுத்து தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி வழக்குபதிவு செய்து சரவணகுமாரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 20,000 மதிப்புள்ள ஆட்டையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>