<p><b>நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக வரும் இந்து முன்னணி&nbsp; மாநில&nbsp; தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.</b></p><p><b style="color: rgb(255, 156, 0);">இது தொடர்பாக, மாநில இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் சக்திவேலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</b></p><p>இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்,&nbsp; &nbsp;செவ்வாய்க்கிழமை ( 9ஆம்தேதி) இரவு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிறார். அதன்பின் சாத்தான்குளம்&nbsp; அருகே உள்ள ஆனந்தவிளையில் உள்ள மாநில பொதுச் செயலர் டாக்டர் அரசுராஜா&nbsp; இல்லத்தில் தங்குகிறார். அதன்பின்&nbsp; புதன்கிழமை&nbsp; (10ஆம்தேதி) காலை அங்குள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் மகா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று. சுவாமி தரிசனம் செய்து, இயக்க நிர்வாகிகளுடன் உரையாடுகிறார்.</p><p>தொடர்ந்து நெல்லை செல்லும் அவர் நெல்லை&nbsp; புறநகர் மற்றும் மாநகர மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடுவதுடன் இயக்க வளர்ச்சி குறித்தும்&nbsp; ஆலோசனை நடத்துகிறார். ஆகையால் மாநில தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இந்து முன்னனி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.</p>