சாத்தான்குளம் அருகே உள்ள கடக்குளம் தி பிளேயிங் ஹார்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட்போட்டிகள் 2 நாள்கள் நடந்தது.

இதில், திசையன்விளை, கடக்குளம், கூட்டப்பனை, சாத்தான்குளம், தட்டார்மடம், உவரி, கூத்தன்குழி, பெரியதாழை, உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொண்டன. இறுதிபோட்டியில் கூட்டப்பனை அணியும், கடக்குளம் தி பிளேயிங் ஹார்ஸ் அணியும் மோதின. இதில் கூட்டப்பனை அணி வென்று முதல் பரிசை தட்டிச்சென்றது.

பின்னர் நடந்த பரிசளிப்புவிழாவில் முதல் பரிசு பெற்ற கூட்டப்பனை அணிக்கு திசையன்விளை முன்னாள் ரோட்டரி கிளப்தலைவர் இடைச்சிவிளை பாலகிருஷ்ணன் ரூ 10  ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கினார். 2 ஆம் பரிசு பெற்ற கடக்குளம் அணிக்கு ரூ 8 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை மும்பை ஜான் கென்னடி வழங்கினார். 3ஆம் பரிசு பெற்ற திசையன்விளை லைப் லாங் கிரிக்கெட் அணிக்கு ரூ 5 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை கோவை நிர்மல் வழங்கினார். தொடர்ந்து சிறந்த ஆட்ட வீர்ர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை கடக்குளம் தி பிளேயிங் ஹார்ஸ்  அணி நிர்வாகிகள்  செய்திருந்தனர்.