கோவில்பட்டி வீதிகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாக நடமாடிக் கொண்டிருக்கும் நாய்கள் மற்றும் மாடுகளை அப்புறப்படுத்த கூறி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக நகராட்சி ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் போக்குவரத்துக்கு இடையூராகவும், விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாகவும் நடமாடும் மாடுகள் மற்றும் நாய்களை அப்புறப்படுத்துக்கோரி, இன்று கோவில்பட்டி நகராட்சி ஆணையரிடம் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தலைவர் தமிழரசன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

இதில், செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.