<p></p><p><b>சாத்தான்குளம் முதலூரில் நடைபெற்ற திமுக கொடியேற்று விழாவில், மத்திய ஒன்றிய திமுக செயலாளர் பொன் முருகேசன் கலந்து கொண்டு கொடியேற்றினார்.</b></p><p>தமிழக முதல்வரும், திமுக தலைவருமான&nbsp; மு.கஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில்,&nbsp; துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரித்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோரது ஆலோசனையின் பெயரில்,&nbsp; கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டும், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாகவும், சாத்தான்குளம் மத்திய ஒன்றிய திமுக சார்பில்&nbsp; முதலூரில் திமுக கொடியேற்றி&nbsp; பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p>இதில், மத்திய ஒன்றிய திமுக செயலாளர்&nbsp; முருகேசன் தலைமை வகித்து&nbsp; திமுக கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்&nbsp; . கிளைச் செயலாளர்கள் ஆசீர், ஞானசேகர், ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் சாமுவேல், நிர்வாகிகள் ஜோசப் பொன்ராஜ், பொன்ராஜ், கணேஷ், சாலமோன், பீட்டர், மிகவேல், ராஜசிங் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>