கோவில்பட்டி அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு - கடைகளை அடைத்து கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள், வியாபாரிகள் போராட்டம்!
நிருபர்
July 01, 2024
கோவில்பட்டி அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு - கடைகளை அடைத்து கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள், வியாபாரிகள் போராட்டம்!
<p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் புதிதாக கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டு, கருப்புக் கொடி ஏற்றி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>இப்பகுதியில் ஏற்கனவே 2 கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில் மேலும் இங்கு புதிதாக கல்குவாரி அமைக்க கூடாது என்றும், ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்குவாரிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், குடியிருப்பு பகுதி அருகே கல்குவாரி அமைக்க முயற்சி நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p>எனவே, செட்டிகுறிச்சி பகுதியில் புதிதாக கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டு, கருப்புக் கொடி ஏற்றி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>