<p><b>சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு கேரளா அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.</b></p><p><b style="color: rgb(57, 123, 33);">இது தொடர்பாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</b>&nbsp;</p><p>அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை எவ்வித அனுமதியும் இன்றி கேரள அரசு தற்பொழுது தொடங்கியுள்ளது.&nbsp;</p><p>இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து வரத்து குறைந்து, அமராவதி அணையின் பாசன&nbsp; விவசாயிகள்&nbsp; வாழ்வாதாரம்&nbsp; முற்றிலும் பாதிக்கப்படும். எனவே அமராவதி&nbsp; அணை பாசன&nbsp; விவசாயிகள்&nbsp; நலன்&nbsp; கருதி&nbsp; தமிழ்நாடு&nbsp; அரசு, அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட&nbsp; கேரள&nbsp; அரசு தொடங்கியுள்ள பணியை&nbsp; உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>