நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், பிள்ளாநல்லூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூட்டுறவு துறை சார்பில் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்புடன் இரத்த தான முகாம் நடைபெற்றது.

இம்முகாமினை கூட்டுறவு துறை இணை பதிவாளர் அருளரசு  தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பணியாளர்கள் பலர் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு  45 யூனிட் இரத்த தானம் வழங்கினார்கள். இரத்த கொடையாளர்களுக்கு அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இம்முகாமில் துணை பதிவாளர் நாகராஜன், ரெட்கிராஸ் செயலர் இராஜேஸ் கண்ணன், அரசு இரத்த வங்கி மருத்துவர் அன்பு மலர், பிள்ளாநல்லூர் மருத்துவ அலுவலர் செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.