<p><b>தூத்துக்குடிக்கு வருகை தந்த தமிழக தலைமைத்&nbsp; தேர்தல் அதிகாரியை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் வரவேற்றார்.&nbsp;</b></p><p>தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,&nbsp; தமிழக தலைமைத்&nbsp; தேர்தல் அலுவலர்/அரசு முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி&nbsp; தலைமையில், தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார். இதனையொட்டி தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக தலைமைத் தேர்தல் அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, புத்தகம் வழங்கி வரவேற்றார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உடனிருந்தார்.&nbsp;</p>