<p><b>5 வயது சிறுமிக்கு பாலியல்&nbsp; தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.&nbsp;</b></p><p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் எட்டயபுரம் படர்ந்தபுளி பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் முருகன் (61) என்பவரை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.&nbsp;</p><p>இவ்வழக்கை அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி புலன் விசாரணை செய்து கடந்த 27.08.2022 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி&nbsp; சுவாமிநாதன்&nbsp; இன்று&nbsp; குற்றவாளியான முருகனுக்கு 20 வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.</p><p>இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்&nbsp; விஜயலெட்சுமி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர்&nbsp; முத்துகுமாரியையும், விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமை காவலர்கள் சமுத்திரகனி மற்றும்&nbsp; சங்கீதா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.</p>