பெங்களூரு மருத்துவமனையில் சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் திடீர் அதிகரிப்பு
நிருபர்
January 29, 2021
பெங்களூரு மருத்துவமனையில் சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் திடீர் அதிகரிப்பு

விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே 4 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் அவர் தொடர்ந்து அதே மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், சசிகலாவுக்கு 6 நாட்களுக்கு பிறகு திடீரென்று ரத்த அழுத்தம் அதிகரித்து உள்ளது. இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடலில் சர்க்கரை அளவும் 278 ஆக உயர்ந்து உள்ளது.

இதற்காக அவருக்கு இன்சுலின் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சசிகலா நாளை (சனிக்கிழமை) டிஸ்சார்ஜ் ஆக இருந்த நிலையில் அவருக்கு திடீரென்று ரத்த அழுத்தம் அதிகரித்து இருப்பதால், அவர் டிஸ்சார்ஜ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.