கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக மக்களவைத் தொகுதி வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று கயத்தாறு, கழுகுமலை  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

அவருக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.