<p><b>தூத்துக்குடியில் சுவர் ஏறிக்குதித்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.</b><br></p><p>தூத்துக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் செல்லப்பா மகன் சக்தி விக்னேஷ் (32). இவரது வீட்டிற்குள் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறிக்குதித்து திருட முயன்றுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.</p><p>போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்&nbsp; முடிவைத்தானேந்தல் கிழக்கு தெருவைச் சேர்ந்த பரமசிவன் மகன் மகிழன் (32) என்பதும், அவர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், இதுகுறித்து&nbsp; மத்தியபாகம் உதவி ஆய்வாளர் முத்துவீரப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.&nbsp;</p>