தூத்துக்குடி அமுதா நகரில் இளைஞர் ஒருவர் இன்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த தங்கமுத்து என்பவரது மகன் கருப்பசாமி (26). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு முன்பே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாம்.

இந்த நிலையில், இன்று ( 3.3.24 )  ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கருப்பசாமி வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்பாகம் போலீஸார், அவரது உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவ நடந்த இடத்தை காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்பிரமணிய பாலசந்த்ரா நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து கருப்பசாமியை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.