<p><b>தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை என தேர்தல் களம் களை கட்டியுள்ளது. இந்த நிலையில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் பெண் எம்எல்ஏ விஜயதாரணி இன்று பாஜக வில் இணைந்துள்ளார்.</b></p><p>கட்சியில் தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று காங்கிரஸ் தலைமை மீது விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாகவும் பாஜகவில் இணையப்போவதாகவும், கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவி வந்தன. இதையடுத்து பாஜக வலையில் விஜயதாரணி சிக்கமாட்டார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செலவப்பெருந்தகை கூறியிருந்தார்.</p><p>இந்த நிலையில், இன்று டெல்லியில் பா.ஜ.கவில் இணைந்தார் விஜயதாரணி.</p>