கயத்தாறில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் : சீறிப்பாய்ந்த காளைகள்!
நிருபர்
February 24, 2024
கயத்தாறில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் : சீறிப்பாய்ந்த காளைகள்!

கயத்தாறில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் இப்போட்டியில் கலந்து கொண்டன.

கயத்தாறு-கடம்பூர் சாலையில் நடு மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி, தேன்சிட்டு என்று மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகிறது.

முதலில் நடைபெற்ற நடு மாட்டு வண்டியில் 15 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போக வர 8 மைல் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இப்போட்டியில், கடம்பூர் இளைய ஜமீன்தார் கருணாகரராஜா மாட்டு வண்டி முதல் பரிசையும், 2-வது பரிசை சண்முகபுரம் மெடிக்கல் பி.விஜயகுமார் மாட்டுவண்டியும், 3-வது பரிசை சீவலப்பேரி துர்காம்பிகை மாட்டுவண்டியும், 4-வது பரிசை வேலங்குளம் எம். கண்ணன் மாட்டுவண்டியும் பரிசை தட்டிச்சென்றது.