ஈஷா யோகா மைய ரத யாத்திரை இன்று ( பிப்.,16 )  இரவு தூத்துக்குடிக்கு வருகை தந்தது.

கோவை ஈஷா யோகா மையத்தில் மாா்ச் 8-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழகம் முழுவதும் ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஈஷா யோகா மைய ரத யாத்திரை இன்று ( பிப்.,16 )  இரவு தூத்துக்குடிக்கு வருகை தந்தது. மேள தாளம் முழங்க சிவபக்தா்கள் ரதத்துக்கு வரவேற்பு அளித்தனா்.

ஆதியோகி சிலை கொண்ட ஒரு ரதமும், நாயன்மாா்கள் திருமேனி கொண்ட ஒரு ரதமும் ஒன்றன்பின் ஒன்றாக நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

அப்போது, மகா சிவராத்திரி விழா குறித்த அழைப்பிதழ்கள் துண்டுப் பிரசுரங்களாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.