தமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
நிருபர்
January 24, 2021
தமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று 168 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில் 16 ஆயிரத்து 800 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பு மருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் 7 ஆயிரத்து 381 பேருக்கு ‘கோவிஷீல்டு' தடுப்பு மருந்தும், 194 பேருக்கு ‘கோவேக்சின்' தடுப்பு மருந்தும் என மொத்தம் 7 ஆயிரத்து 575 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அந்தவகையில், தமிழகத்தில் இதுவரை 57 ஆயிரத்து 965 பேருக்கு ‘கோவிஷீல்டு' தடுப்பூசியும், 1,261 பேருக்கு ‘கோவேக்சின்' தடுப்பூசி என 59 ஆயிரத்து 226 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.