<p><b>எட்டயபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.</b></p><p>முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் அருகில் அவரது உருவப்படத்திற்கு அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.&nbsp; இந்நிகழ்வில் அதிமுக வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, ரத்தினம், சிவா, பிரபு, செல்வி, சாந்தி, சின்னத்துரை, கார்த்தி, மோகன், மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி, அதிமுக அவை தலைவர் கணபதி பலர் கலந்து கொண்டனர்.</p>