<p><b>தமிழில் சினிமாவில் “ஒருநாள் கூத்து“ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அந்தப் படத்தில் இடம்பெற்ற “அடியே அழகே“ எனும் பாடலுக்கு வசீகரமான தோற்றத்தில் வந்த நடிகை நிவேதா பெத்துராஜ் இளைஞர்களின் மனங்களை வெகுவாக கவர்ந்தார்.</b></p><p>நிவேதா பெத்துராஜ் மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தூத்துக்குடியில் தனது பள்ளி படிப்பினை பயின்ற இவர், துபாயில் 20 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் அரேபிய நாடுகளில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற அழகு போட்டியில் மிஸ் இந்திய பட்டத்தினை வென்றுள்ளார்.</p><p>மதுரையில் நவம்பர் மாதம் 30-ம் தேதி 1991-ம் ஆண்டு பிறந்த நடிகை நிவேதா பெத்துராஜ்&nbsp; இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதை தொடர்ந்து, அவருக்கு அவரது ரசிகர்கள் மற்றம் பிரபலபங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்</p>