தூத்துக்குடியில் நடிகர் விஷால் பிறந்தநாள் விழா : ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கல்!
நிருபர்
August 30, 2023
தூத்துக்குடியில் நடிகர் விஷால் பிறந்தநாள் விழா : ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கல்!

நடிகர் விஷால் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாவட்ட புரட்சித்தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் அவரது ரசிகர்கள் ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கி கொண்டாடினர்.

நடிகர் விஷாலின் 46 வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய புரட்சித்தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில், தலைவர் பிரகாஷ் தலைமையில், வாகைகுளத்தில் உள்ள அலெக்ஸ் கைலாசம் ஆதரவற்ற மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்கி நடிகர் விஷாலின் பிறந்த நாளை கொண்டாடினர்.

இதில், தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய புரட்சித்தளபதி விஷால் மக்கள் நல இயக்க நிர்வாகிகள் சென்ராயப் பொருமாள், சங்கரலிங்கம், வன்னிராஜ், கார்த்திக், ஷேக் முகம்மது, செய்யது அப்துல் கனி, ஆமீன் நூருல் ஹக் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.