எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார்!
நிருபர்
April 15, 2023
எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார்!
<p><b>எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட கோடைகால நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார்.</b></p><p>அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க, எட்டயபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில், எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்ட கோடைகால நீர், மோர் பந்தலை,</p><p>சட்டமன்ற எதிர் கட்சி பொருளாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள், இளநீர், மோர், தர்பூசணி மற்றும் பழவகைகளை வழங்கினார்.</p><p>இந்நிகழ்ச்சியில், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், எட்டயபுரம் அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, சீனா (எ) முத்துகிருஷ்ணன், கார்ட்டன் பிரபு, சிவா (எ) சிவசங்கர பாண்டியன், கன்னியப்பன், மனோகரன், ரத்தினம், செல்வி, சாந்தி, ஐஸ் முனியசாமி, மோகன், கார்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>