<p><b>ஸ்ரீவைகுண்டம் அருகே கள்ளச்சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், பானை, கேஸ் அடுப்பு மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.</b></p><p>ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் மற்றும் போலீசார் நேற்று (06.03.2023)&nbsp; ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரும்பத்து பகுதியை சேர்ந்த பாதாளம் மகன் ரமேஷ் (36) என்பவரின் வீட்டில் சோதனை செய்ததில், அங்கு அவர் கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஊறல் வைத்திருந்தது தெரியவந்தது.</p><p>உடனே மேற்படி போலீசார்&nbsp; ரமேஷை கைது செய்து அவரிடமமிருந்த 100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், ஒரு கேஸ் ஸ்டவ், ஒரு பானை மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>மேற்படி கைது செய்யப்பட்ட&nbsp; ரமேஷ் மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உட்பட 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>