தூத்துக்குடியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.70 கோடி கடன் உதவி!
நிருபர்
December 29, 2022
தூத்துக்குடியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.70 கோடி கடன் உதவி!
<p><b>தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.70 கோடி கடன் உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்</b>. </p><p>திருச்சிராப்பள்ளி, அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 42,081 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 2,548.04 கோடிக்கான வங்கி கடன் வழங்கும் நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். </p><p>இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் நகர்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள 849 சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் ரூ.54.93 கோடியும், 8 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.4.74 கோடி வங்கி பெருங்கடனும், 27 சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.40.50 இலட்சமும் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 33 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.63 இலட்சமும் உள்பட மொத்தம் 917 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.70 கோடி கடன் உதவிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். </p><p>விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, திட்ட அலுவலர் மகளிர் திட்டம் வீரபத்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். </p>