தூத்துக்குடியில் திருமண ஆசைகாட்டி சிறுமி பாலியல் பலாத்காரம் : இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி மீது புகார்
நிருபர்
December 29, 2022
தூத்துக்குடியில் திருமண ஆசைகாட்டி சிறுமி பாலியல் பலாத்காரம் : இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி மீது புகார்
<p><b>தூத்துக்குடியில் திருமண ஆசைகாட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. </b></p><p><b style="color: rgb(156, 0, 0);">இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : </b>நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் ராஜ் மகன் அறிவழகன் (25). இவர் தூத்துக்குடியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். </p><p>இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாதாரம் செய்துள்ளாராம். இதனால், தற்போது அந்தப் பெண் ஆறு மாதம் கர்ப்பமாக உள்ளாராம். இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் வனிதா போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அறிவழகனை தேடி வருகிறார். </p>