விளாத்திகுளம் காவல் நிலையத்தில் எஸ்பி., ஆய்வு
நிருபர்
December 15, 2022
விளாத்திகுளம் காவல் நிலையத்தில் எஸ்பி., ஆய்வு
<p><b>விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு மேற்கொண்டாா்.</b></p><p>விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை அலுவலகம் மற்றும் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் முக்கிய வழக்கு கோப்புகளையும், ஆவணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று (15.12.2022) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p><p>இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு, உதவி ஆய்வாளர் மகாலிங்கம், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், </p><p>நாகஜோதி உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.</p>