<p><b>முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, எட்டையபுரத்தில் ஜெயலலிதாவின் திருஉருவப்படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</b></p><p>தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது 6-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, தமிழக சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், கோவில்பட்டி சட்ட மன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ ஆலோசனையின் படி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எட்டையபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருஉருவப்படத்திற்கு , நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</p><p>இந்த நிகழ்வில், அவைத்தலைவர்&nbsp; கணபதி, சிவ மாரியம்மன், வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, காட்டன்&nbsp; பிரபு, சிவசங்கரபாண்டியன், சீனா, செல்வி, சாந்தி, ரத்தினம், வேலுசாமி, சுப்புலட்சுமி,உள்பட அதிமுக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதிபொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>