கயத்தார் : வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!
நிருபர்
November 21, 2022
கயத்தார் : வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!
<p><b>கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.</b></p><p>மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) விஜயகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் 19.11.2022 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவஞானபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் அதே பகுதியை சேர்ந்த வெள்ளைசாமி மகன் அருண் (27) என்பதும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.</p><p>உடனே மேற்படி போலீசார் அருணை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து கயத்தார் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>