<p><b>துாத்துக்குடி மாநகர் மாவட்ட ஓ.பி.எஸ்., அணி மாவட்ட செயலாளராக ஏசா துரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</b></p><p>துாத்துக்குடி அ. தி. மு.க. நகர செயலாளர், எம். ஜி.ஆர். மன்ற செயலாளர் போன்ற பதவிகளை வகித்தவர் ஏசாதுரை. இவர் தற்போது ஓ.பி.எஸ்., தலைமையிலான அ.தி.மு.க., அணியில் உள்ளார்.</p><p>இந்த நிலையில் ஏசாதுரையை தூத்துக்குடி,&nbsp; ஓட்டப்பிடாரம் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகள் அடங்கிய தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தமக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கிய ஓ.பி.எஸ்.க்கு ஏசாதுரை நன்றி தெரிவித்துள்ளார்.</p>