ஜனவரி 3- ஆம் தேதி மதுரை வர வேண்டும் - மு.க.அழகிரி அழைப்பு
நிருபர்
December 25, 2020
ஜனவரி 3- ஆம் தேதி மதுரை வர வேண்டும் _ மு.க.அழகிரி அழைப்பு

தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜனவரி 3- ஆம் தேதி மதுரை வர வேண்டும் என முன்னாள் அமைச்சரும்,மறைந்த முன்னாள் திமுக தலைவருமான மு.கருணாநிதி மகனுமான மு.க.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன்.

இந்த ஆலோசனை கூட்டம் 03/01/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில் மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள என்னுடைய ஆதரவாளர்கள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் வரும் பொழுது முகக்கவசம் அணிந்து வர வேண்டும்" என தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.