தூத்துக்குடியில் நாளை மது விற்பனைக்கு தடை- ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு!
நிருபர்
October 29, 2022
தூத்துக்குடியில் நாளை மது விற்பனைக்கு தடை- ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு!
<p><b>தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 30.10.22 ஞாயிற்றுக்கிழமை மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.</b></p><p>திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 30.10.22 ஞாயிற்றுக்கிழமை மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.</p><p>அன்றைய தினம், தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபானக் கடைகளும், மதுபானக் கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>மது பானம் விற்பனை, மது பானத்தை கடத்துதல், அவற்றை பதுக்கி வைத்தல் போன்றவை கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். </p>