தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிப் படுகொலை!
நிருபர்
August 22, 2022
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிப் படுகொலை! திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர்
<p><b>கோவில்பட்டி அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</b></p><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே திட்டங்குளம் கிராம ஊராட்சி மன்ற தலைவராக பொன்ராஜ் ( வயது 63 ) என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில், இன்று மதியம் தெற்கு திட்டங்குளம் காலனி பகுதியில் உள்ள தோட்டத்திற்கு விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்ற போது, அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து போட்டு விட்டு தப்பிச் சென்றனர். </p><p>இதனையடுத்து, தகவல் அறிந்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>இச்சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது</p>