<p><b>தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வாலிபரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</b></p><p>தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் வசித்து வருபவர் சரவணகுமார் (29), கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு புதிய பேருந்து நிலையம் பகுதியில் நின்று கொண்டிருந்த போது, அங்கு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை&nbsp; அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர்.</p><p>இச்சம்பவம் அறிந்து, தூத்துக்குடி&nbsp; காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், துாத்துக்குடி டவுன் டி.எஸ்.பி., சத்தியராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை&nbsp; நடத்தினர். மேலும் இது தொடர்பாக வட பாகம் காவல்நிலல போலீசார் வழக்குப்ப திவு செய்து கொலை குறித்து விசாரித்து வருகின்றனர். முன் விரோதத்தால் நடந்துள்ளதாக கூறப்படும் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>