<p><b>தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில்&nbsp; நல்லிணக்க நாள் உறுதிமொழி மாநகராட்சி மேயர், ஆணையர், அதிகாரிகள் எடுத்தனர்.</b></p><p>தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழியை மேயர் ஜெகன் பெரியசாமி வாசிக்க அதிகாரிகள், ஊழியர்கள் எடுத்தனர்.</p><p>சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என அலுவலர்கள் உறுதிமொழியேற்றனர். மேலும், அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமலும், பேச்சு வார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் உறுதி அளித்தனர்.</p><p>இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>