<p><b>தூத்துக்குடி கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 75வது ‘சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.</b></p><p>தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக குழு தலைவரும், பள்ளியின் தாளாளருமான ஹாஜி மீராசா தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து, மாணவர்களின் திறன் வெளிப்பாடு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.&nbsp;</p><p>இவ்விழாவில் ஜாமியா பள்ளிவாசலின் நிர்வாக குழு துணைத் தலைவர்&nbsp; ரஹ்மான், செயலர் சாகுல் சிராஜுதீன், பொருளாளர் சையது இப்ராஹிம் மூசா, உறுப்பினர்கள் ஆடிட்டர் சுபேர், முகம்மது உவைஸ், பீர் முகமது அசிம்&nbsp; ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p>பள்ளி முதல்வர் செய்து அலி வரவேற்புரை ஆற்றினார். ஆசிரியர்கள்&nbsp; மும்தாஜ், பிரபாகரன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். பள்ளி துணை முதல்வர்&nbsp; முகம்மது யூசுப் இம்ரான் கான் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>