தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக.5ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நிருபர்
July 26, 2022
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக.5ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு தூத்துக்குடி செய்திகள் Thoothukudi news local news லோக்கல் நியூஸ் online news online tamil news தமிழ் செய்திகள் தமிழ் நியூஸ்
<p><b>பனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு வருகிற ஆக.5ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. </b></p><p>இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,</p><p>தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5ம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 05.08.2022 (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. </p><p>எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலவாணி முறிவுச் சட்டத்தின்படி (Negotiable Instrument Act) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக வரும் 13.08.2022 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.</p>